மென்பந்தாட்ட செய்தி
ஆஸி. ஓபன்: ஹெனினை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்
[ சனிக்கிழமை, 30 சனவரி 2010, 01:47.26 பி.ப GMT ]
ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சற்று முன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் ஹார்டீனை போராடி வீழ்த்தி ஆஸி.ஒபன் சாம்பியன் பட்டம் வென்றார்.

முதல் செட்டில் தன் சர்வ்களை அபாரமாகத் துவங்கிய செரீனா வில்லியம்ஸ் ஹெனினின் ஒரு சர்வை பிரேக் செய்தார். அவ்வாறு பிரேக்ச் செய்ய ஹெனின் செய்த தவறுகளும் ஒரு காரணம். அதன் பிறகு தன் அபார சர்வ்களை வீசி தன் சர்வ் கேம்களை வென்ற செரீனா வில்லியம்ஸ் முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டை ஆக்ரோஷமாகத் துவங்கிய ஹெனின் தன் சர்வை வெற்றி பெற செரீனா 0-30 என்று பின் தங்கி தன் சர்வை வெற்றி பெற்று ஆட்டம் 1-1 என்று இருந்தது.

அடுத்ததாக ஹெனின் வீசிய சர்வ்களை முறியடித்த செரீனா, ஹெனினின் சர்வை பிரேக் செய்து 2-1 என்று முன்னிலை பெற்றார். ஆனால் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஹெனின் மீண்டும் அபாரமான சில ஷாட்களையும் சர்வ்களையும் அடித்து பிரேக் செய்து 2-2 என்று சமன் செய்தார். அதில் குறிப்பாக செரீனாவின் முதல் மின்னல்வேக சர்வை திருப்பி கிராஸ் கோட் ஷாட் அடித்தது அசத்தல் ஷாட்டாகும்.

பிறகு அந்த செட்டில் செரீனா தன் சர்வ்களில் மேலும் தவறுகளையும் கிரவுண்ட் ஷாட்டில் சில அறியாமல் செய்த தவறுகளையும் இழைக்க ஹெனின் 6-3 என்று கைப்பற்றினார்.

3-வது செட் செரீனாவின் செட் என்றால் மிகையாகாது. இந்த செட்டில் அபாரமான சர்வ்களோடு, நெட் அணுகல், மற்றும் சக்தி வாய்ந்த கிரவுண்ட் ஷாட்கள் மூலம் 3 முறை ஹெனின் சர்வை பிரேக் செய்த செரீனா 6-2 என்று வெற்றி பெற்று தனது 11-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]