| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் டிவைன் பிராவோ உபாதையினால் பாதிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 12:31.24 பி.ப GMT ] |
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் டிவைன் பிராவோ உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய அணிக்காக டுவன்ரி‐20 போட்டி ஒன்றில் விளையாடிய போது பிராவோவின் கை விரலில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் பிராவோ பங்கேற்க மாட்டார் எனவும், அவர் நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, டிவைன் பிராவோவிற்கு பதிலீடாக வேவல் ஹைன்ட்ஸ் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். சந்தர்போல், சர்வான் மற்றும் சுலைமான் பென் ஆகியோரும் இந்தப் போட்டித் தொடரில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் மிகவும் சாவல் மிக்கதாக அமையும் என விளையாட்டு விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்
|
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|