| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| இந்திய அணியில் பிளவு இல்லை : ஷேவாக் மறுப்பு |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 10:34.50 மு.ப GMT ] |
 இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 நாடுகள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடியது. 2-வது டெஸ்ட் போட்டியில் அமித் மிஸ்ரா நீக்கப்பட்டது தொடர்பாக கேப்டன் டோனிக்கும், துணை கேப்டன் ஷேவாக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்திய அணியில் பிளவு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. அணியில் டோனி கோஷ்டி, ஷேவாக் கோஷ்டி என்று இரு பிரிவாக இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தன.
இதை சுழற் பந்து வீரர் ஹர்பஜன்சிங் சமீபத்தில் மறுத்து இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியில் பிளவு எதுவும் இல்லை என்று அதிரடி பேட்ஸ் மேன் ஷேவாக் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய அணியில் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். யாருக்கும், யாருடன் கருத்து வேறுபாடு இல்லை. ஒவ்வொரு வீரர்களும், மற்ற வீரர்களின் சாதனையை எண்ணி பெருமைப்படுகிறார்கள்.
இந்திய அணியில் பிளவு இருப்பதாக மீடியாக்கள் தான் ஊகத்தின் அடிப்படையில் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஷேவாக் கூறினார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது டோனிக்கும், ஷேவாக்குக்கும், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதை டோனி மறுத்து இருந்தார். தற்போது ஷேவாக் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|