ஏனைய விளையாட்டு செய்தி
போர்மியூலா வன் கார்பந்தாப் போட்டி புள்ளி வழங்கும் முறையில் மாற்றம் : FIA
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 10:44.52 மு.ப GMT ]
இந்த ஆண்டு முதல் போர்மியூலா வன் மோட்டார் கார் பந்தயப் போட்டிகளின் புள்ளி வழங்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் கார்பந்தய சர்வதேச பேரவை அறிவித்துள்ளது.

புதிய புள்ளி வழங்கும் முறையின் அடிப்படையில் 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 என்ற கிரமத்தில் வெற்றியாளர்களுக்கு புள்ளிகள் நிர்ணயிக்கப்படும்.

இதுவரை காலமும் முதலாம் இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் இரண்டாகக் காணப்பட்டதாகவும், தற்போது இந்த இடைவெளி ஏழாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடைவெளியின் காரணமாக வீரர்கள் போட்டிகளில் வெற்றியீட்ட அதிக முனைப்பு காட்டுவார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் காரில் பயன்படுத்தும் டயர்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கார்பந்தயப் பேரவையினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சட்ட திட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த யோசனைத் திட்டங்கள் தொடர்பான இறுதி அறிக்கை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புள்ளி வழங்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென கடந்த சில காலமாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நடைமுறைகளின் மூலம் 2010ம் ஆண்டு முதல் போர்மியூலா வன் கார்பந்தயப் போட்டிகள் புதுப் பொழிவுடன் ரசிகர்களை ஈர்க்கும் என கார்பந்தாட்டப் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது
T20 : பாகிஸ்தான் அணி தோல்வி
பாக். வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை: ஊழல் தடுப்புக்குழு அதிரடி
ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் பகிரங்க அறிவிப்பு
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்]
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ]
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ]
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்]
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]