துடுப்பாட்ட செய்தி
வெள்ளையர்கள் செய்தால் கலை; நாங்கள் செய்தால் தவறா? : இம்ரான்கான் கேள்வி
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 10:36.49 மு.ப GMT ]
அஃப்ரீடி பந்தை சேதம் செய்த குற்றச்சாட்டை அடுத்து பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவர் இம்ரான்கான், மற்றும் ரமீஸ் ராஜா ஆகியோர் எல்லா அணிகளும்தான் பந்தை சேதம் செய்கின்றன என்று குற்றம்சாற்றியுள்ளனர்.

துணைக் கண்ட வீரர்கள் மட்டுமே இதற்கு தண்டனை பெறுகின்றனர் என்று கூறிய இம்ரான் கான்,

"நாங்கள் விளையாடும்போது ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஒன்றைக் கண்டுபிடித்தோம் ஆனால் எங்களை ஏமாற்றுக்காரர்கள் என்று குற்றம்சாற்றினர். ஆனால் இதையே இங்கிலாந்து மற்றும் பிற பந்து வீச்சாளர்கல் செய்தபோது இது ஒரு கலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது." என்று காட்டம் காட்டியுள்ளார் இம்ரான்.

"மற்ற அணி வீரர்களும் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி பந்தின் தன்மையை மாற்றியுள்ளதாக பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய உள்ளன." என்றார் இம்ரான்.

ஆனால் ரமீஸ் ராஜா கூறுகையில், " இது ஒன்றும் புதிதல்ல, ஆனால் அஃப்ரீடி செய்ததை ஒரு போதும் ஏற்கமுடியாது. அஃப்ரீடி ஒன்றும் கிளப் போட்டியில் விளையாடவில்லை, அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடுகிறார். அத்தனை கேமராக்கள் இருக்கும்போது இதுபோன்ற பைத்தியக்காரத் தனமான செயலை அவர் தவிர்த்திருக்கவேண்டும்."

"வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதல் வேறு, ஆனால் அதற்காக அவர் என்ன செய்தாரோ அது மிகவும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது." என்றார் ரமீஸ் ராஜா.

அவர் ஏன் இது போன்ற செயலில் ஈடுபட்டார் என்பது சாதாரண விஷயமல்ல, இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரிக்கவேண்டும் என்றும் ரமீஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது
T20 : பாகிஸ்தான் அணி தோல்வி
பாக். வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை: ஊழல் தடுப்புக்குழு அதிரடி
ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் பகிரங்க அறிவிப்பு
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்]
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ]
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ]
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்]
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]