| | | |
| |
| | | |
| |
| உதைப்பந்தாட்ட செய்தி |
| ஆபிரிக்க கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் எகிப்து சாம்பியன் பட்டம் |
| [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 11:50.39 மு.ப GMT ] |
ஆபிரிக்க கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் எகிப்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.எகிப்து தேசிய கால்பந்தாட்ட அணி தொடர்ச்சியாக மூன்று தடவைகள் ஆபிரிக்க கிண்ண சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக ஏழு தடவைகள் எகிப்து அணி ஆபிரிக்க கிண்ண சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
கானா அணிக்கு எதிராக அங்கோலாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் எகிப்து வெற்றி வாகை சூடியது.
எகிப்து அணியின் சார்பில் பதிலீட்டு ஆட்டக்காரராக இடையில் களமிறங்கிய மொஹமட் கெடோ போட்டியில் போடப்பட்ட ஒரே கோலைப் போட்டார்.
தொடர்ச்சியாக மூன்று தடவைகள் சாம்பயின் பட்டம் வென்ற முதலாவது ஆபிரிக்க நாடு என்ற பெருமையை எகிப்து அணி பெற்றுக் கொண்டுள்ளது.
ஆபிரிக்க கிண்ணத்தை வென்று இன்றைய தினம் நாடு திரும்பிய எகிப்து தேசிய கால் பந்தாட்ட வீரர்களுக்கு நாட்டின் தலைநகர் கெய்ரோவில் விசேட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|