மெய்வல்லுனர் போட்டி செய்தி
ஹூசெய்ன் போல்ட் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றத் திட்டம்
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 10:01.34 மு.ப GMT ]
உலக குறுந்தூர ஓட்ட நட்சத்திரமாக வர்ணிக்கப்படும் ஜமெய்க்காவின் ஹூசெய்ன் போல்ட் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றத் தீர்மானித்துள்ளார்.

ஜமெய்க்காவில் இந்த மாதம் 13ம் திகதி நடைபெறவுள்ள 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் போல்ட் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

பருவ காலத்தை ஆரம்பிக்கும் நோக்கில் போல்ட் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

வழமையாக பயிற்சிகளை ஆரம்பிக்கும் வகையில் போல்ட் 100, 200 மீற்றர் தவிர்ந்த நீண்ட தூர ஓட்டப் போட்டியில் போல்ட் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நியூ யோர்க்கில் நடைபெறவுள்ள டயமன்ட் மெய்வல்லுனர் போட்டியில் 100 மீற்றர் போட்டியில் கலந்து கொள்ளப் போவதாக போவதாக போல்ட் அறிவித்துள்ளார்.

2010ம் ஆண்டில் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த உத்தேசித்துள்ளதாக போல்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஹூசெய்ன் போல்ட், 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது
T20 : பாகிஸ்தான் அணி தோல்வி
பாக். வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை: ஊழல் தடுப்புக்குழு அதிரடி
ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் பகிரங்க அறிவிப்பு
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்]
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ]
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ]
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்]
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]