துடுப்பாட்ட செய்தி
முஹமட் ஆசீப் டுபாய் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 05:50.11 மு.ப GMT ]
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் முஹமட் அசீப் டுபாய் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள டுவன்ரி‐20 போட்டிகளில் அசீப் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக குழாமில் அசீப் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த போதிலும், டுபாய் அதிகாரிகள் அசீப்பிற்கு வீசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

முஹமட் அசீப்பை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்க முடியாது என அந்நாட்டு அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

2008ம் ஆண்டு ஜூன் மாதம் டுபாய் விமான நிலையத்தில் வைத்து சிறியளவு போதைப் பொருளுடன் அசீப் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தின் போது டுபாய் அதிகாரிகள் அசீப் நாட்டிற்குள் பிரவேசிக்கக் கூடாது என தடை விதித்திருந்தனர்.

இந்தத் தடையை தளர்த்துமாறு பாகிஸ்தான் உயரதிகாரிகள் கோரிய போதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இதற்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிராக நiபெற்ற போட்டித் தொடரின் போதும் பாகிஸ்தான் அதிகாரிகள் அசீப்பை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு கோரியிருந்தனர்.

எனினும், இந்த கோரிக்கைகளை ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது
T20 : பாகிஸ்தான் அணி தோல்வி
பாக். வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை: ஊழல் தடுப்புக்குழு அதிரடி
ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் பகிரங்க அறிவிப்பு
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்]
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ]
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ]
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்]
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]