| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| அபார வெற்றியினால் மீண்டும் முன்னிலை வகிக்கும் அவுஸ்திரேலிய |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 07:19.18 மு.ப GMT ] |
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆவுஸ்திரேலிய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.ஆஸ்திரேலியா சென்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று மெல்பேனில் நடந்தது. மேற்கிந்திய அணி தலைவர் கிறிஸ் கெய்ல் முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்தார்.
முதலில் துடுப்பாட்டம் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர; முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களை எடுத்தனர் . போலார்டு 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டிவிடும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வீரர்கள் வரிசையாக ஆட்டமிழப்புச் செய்யப்பட வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ஓட்டங்களுக்கு வீரர்கள் முழுவதும் ஆட்டமிழக்க தோல்வியடைந்தது.
ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய சேன் வொட்சன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என ஆவுஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடக்கிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|