| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| கம்பீர், தெண்டுல்கர் அவுட் : இந்தியா தடுமாற்றம் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 07:24.33 மு.ப GMT ] |
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறி வருகிறது.6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்களை எடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸை நேற்று டிக்ளேர் செய்தது. பின்னர் நேற்றைய ஆட்ட நேர இறுதியி்ல் ஆடத் தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் கம்பீர் 12 ரன்கள் எடுத்திருந்தபோது மார்கலின் பந்துவீச்சில் பவுச்சரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆடவந்த முரளி விஜய் 4 ரன்களுக்கு ஸ்டெயின் பந்துவீச்சில் போல்டானார். இதன் பிறகு வந்த சச்சின் தெண்டுர்கலும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் 3 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் என்ற மோசமான நிலையில் இந்திய அணி தடுமாறியது. எனினும், மறுபுறம் சேவக் நிதானமாக ஆடி அரைச் சதம் அடித்ததால் 41-வது ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுக்க முடிந்தது. பத்ரிநாத் 26 ரன்களுடனும் சேவக் 98 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|