| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| தென் ஆப்பிரிக்கா அணி 558 ரன் எடுத்து டிக்ளேர் : இந்தியா ஆட்ட முடிவில் 25/0 |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 01:54.44 பி.ப GMT ] |
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன் எடுத்து இருந்தது.காலிஸ் 159 ரன்னும், ஹசிம் அம்லா 115 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
6 ரன்னுக்குள் தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டான அம்லா-காலிஸ் ஜோடி சரிவில் இருந்து மீட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள்.
தென்ஆப்பிரிக்க அணி 96.1 ஓவரில் 300 ரன்னை குவித்தது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ரன் உயர்ந்த வண்ணம் இருந்தது.
ஒருவழியாக இந்த ஜோடியை ஹர்பஜன்சிங் பிரித்தார். தனது முதல் இரட்டை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட காலிஸ் 173 ரன்னில் ஆட்டம் இழந்தார். 351 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.
அவர் ஆட்டம் இழந்த போது தென்ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் 346 ஆக இருந்தது. அம்லா-காலிஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 340 ரன் குவித்தது முக்கிய அம்சமாகும்.
4-வது விக்கெட்டுக்கு அம்லாவுடன், டிவில்லியாஸ் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளையின்போது தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 379 ரன் குவித்து இருந்தது.
ஹசிம் அம்லா 170 ரன்னுடனும், டிவில்லியாஸ் 17 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தென் ஆப்பரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. 128.1-வது ஓவரில் அந்த அணி 400 ரன்னை குவித்தது. ஹசிம்அம்லா மிகவும் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
141.3 ஒவர் இருக்கும் போது நிதானமாக விளையாடிய டிவில்லியர்ஸ் 53 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் வந்த டுமினி 9 ரன் எடுத்த பெவுலியன் திரும்பினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய பவுச்சர் நிதானமாக விளையாடி ரன் கணக்கை உயர்த்தினார். சிறிது நேரம் தாக்கு பிடித்த பவுச்சர் 39 ரன் எடுத்து வெளியேறினார்.
அடுத்ததாக களம் இறங்கிய ஸ்டெய்ன் ரன் எதுவும் எடுக்காமல் விளையாடி இருந்தார். மறு முனையில் விளையாடிய ஹசிம் அம்லா சிறப்பாக விளையாடி 253 ரன் எடுத்து இருவரும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 558 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும் காம்பிரும் களம் இறங்கினர் இருவரும் நிதானமாக விளையாடினர். சேவாக் 9 ரன்னுடனும் காம்பீர் 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதனால்2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 25 ரன் எடுத்தது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|