| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| நியூஸீலாந்தை போராடி வென்றது அவுஸ்திரேலிய அணி |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 10:42.18 மு.ப GMT ] |
நியூஸீலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.ஆக்லாந்து நகரில் இன்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்ட்ரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது. துவக்க வீரர் ஹேடின் 53 ரன்கள், கிரேக் வொய்ட் 54 ரன்கள், மைக்கேல் ஹஸ்ஸி 56 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றி பெற 274 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸீலாந்து அணி துவக்கத்திலேயே சரிவைச் சந்தித்தது. துவக்க வீரர்கள் மெக்குல்லம் 24 ரன்கள், இங்ராம் 14 ரன்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய குப்டில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நியூஸீலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. போட்டி மீண்டும் துவங்கிய போது 45 ஓவர்களில் 266 ரன்கள் எடுக்க வேண்டும் என டக்வர்த் லூயிஸ் முறையில் நியூஸீலாந்து அணிக்கான வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இதன் பின்னர் களமிறங்கிய ஸ்காட் ஸ்டைரிஸ் ஓரளவு தாக்குப்பிடித்து 46 ரன்களும், ஹோப்கின்ஸ் 35 ரன்களும் எடுத்தனர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் வெட்டோரி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லப் போராடினார்.
கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதைத் தொடர்ந்து வெட்டோரியும் 70 ரன்களில் அவுட் ஆனதால், நியூஸீலாந்து அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணித் தலைவர் வெட்டோரிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற போட்டிக்கணக்கில் அவுஸ்திரேலியா சமன் செய்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|