துடுப்பாட்ட செய்தி
ஐ.பி.எல். புதிய அணிகளை வாங்குவது யார்?
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 10:33.13 மு.ப GMT ]
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், முப்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

இந்த 8 அணிகளையும் பிரபலங்கள் கோடிக்கணக்கான பணம் கொடுத்து வாங்கின. வீரர்களும் ஏலம் முறையில் எடுக்கப்பட்டனர். ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.

2008-ம் ஆண்டு நடந்த முதல் ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜஸ் வெற்றி பெற்றது.

3-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 12-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 25-ந் தேதி வரை நடக்கிறது.

2011-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் மேலும் 2 அணிகள் பங்கேற்கிறது. அகமதாபாத், நாக்பூர் ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு இந்த புதிய அணிகள் இருக்கும்.

2 புதிய அணிகளை வாங்குவதற்கான டெண்டர் விண்ணப்பம் நடைமுறை ஏற்கனவே தொடங்கி விட்டது. புதிய அணிகளுக்கான தொகையை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான தேதி நேற்றுடன் முடிந்து விட்டது.

இதனால் புதிய 2 அணிகளை யார் வாங்குகிறார்கள் என்ற விவரம் நாளை பிற்பகல் தெரியும்.

இந்த அணிகளை வாங்கு வதற்கான குறைந்தபட்ச தொகை ரூ.1012 கோடியாகும். இந்த தொகையை விட யார் அதிகமான தொகையை டெண்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்களோ அவர்கள் அணியின் உரிமை வழங்கப்படும்.

குஜராத்தை சேர்ந்த பிரபல அதானி குரூப், சகாரா நிறுவனம், இங்கிலாந்து கால்பந்து கிளப், ஜெய் பீ குரூப் உள்பட பல நிறுவனங்கள் இதற்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் மோகன்லாலும், டைரக்டர் பிரியதர்சனும் இணைந்து ஐ.பி.எல். அணியை வாங்க திட்டமிட்டு இருந்தனர். கடைசி நேரத்தில் அவர்கள் அதில் இருந்து விலகினார்கள். இதேபோல இங்கிலாந்தில் உள்ள எம்.சி.சி. கிளப்பும் இந்த போட்டியில் இருந்து விலகியது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]