| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| மேற்கிந்திய தீவுகளை 2 ரன்னில் வீழ்த்தியது ஜிம்பாப்வே |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 01:25.36 பி.ப GMT ] |
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி ‘த்ரில்’ வெற்றி பெற்றுள்ளது.கயானாவில் நேற்று நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. துவக்க வீரர்கள் மஸாகட்ஸா 41 ரன்கள், சிபன்டா 95 ரன்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய தைபூ 51 ரன் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் போலார்டு 2 விக்கெட், ரோச், மில்லர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
வெற்றி பெற 255 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணியின் துவக்க வீரர்கள் கெய்ல், பரத் இருவரும் சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில் கெய்ல் 57 ரன்கள், பரத் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சந்தர்பால் 70 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக சந்தர்பால் ஒரு முனையில் சிறப்பான விளையாடிய போதும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜிம்பாப்வே தரப்பில் மஸகட்ஸா 3 விக்கெட், சிகும்புரா 2 விக்கெட், லாம்ப், உட்செயா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். ஜிம்பாப்வே வீரர் சிபன்டா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|