| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| முரளிதரன் 2011ஆம் ஆண்டு உலகப்கோப்பைக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 03:26.04 பி.ப GMT ] |
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற முடிவு செய்துள்ள இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன், 2011ஆம் ஆண்டு உலகப்கோப்பைக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வரும் அக்டோபரில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் முரளிதரன் ஓய்வு அறிவிப்பு வெளியிடுவார் எனத் தெரிகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு முரளிதரன் அளித்துள்ள பேட்டியில், “இன்னும் ஒன்று அல்லது 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன். அதன் பின் ஓய்வு பெற்றுவிடுவேன். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே நான் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
2011 உலகக்கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதே எனது இலக்கு. எனது உடல் நலம் சிறப்பாக உள்ளதால் உலகக்கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன்” என்றார்.
இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 792 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முரளிதரன், 800 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் முதல் வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றவுடன் முரளிதரன் ஓய்வு அறிவிப்பு வெளியிட உள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|