துடுப்பாட்ட செய்தி
அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூஸீலாந்து
[ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 03:58.56 பி.ப GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இப்போட்டியில் முதலில் பேட் செய்த அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது. துவக்க வீரர்கள் வாட்ஸன் 45 ரன்கள், ஹேடின் 12 ரன்கள் எடுத்தனர். அணித்தலைவர் பாண்டிங் 44 ரன்கள், மைக்கேல் கிளார்க் 22 ரன்கள், கிரேக் வொய்ட் 33 ரன்கள், மைக்கேல் ஹஸ்ஸி 59 ரன்கள், ஹோப்ஸ் 33 ரன்கள், மிட்செல் ஜான்சன் 21 ரன்கள் எடுத்தனர்.

நியூஸீலாந்து தரப்பில் டேரல் டஃபி 3 விக்கெட்டுகளும், ஷேன் பாண்ட் 2 விக்கெட்டுகளும், சௌத்தீ, ஓரம், ஃப்ராங்ளின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

வெற்றி பெற 276 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸீலாந்து அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடியது. துவக்க வீரர்கள் இங்ராம் 41 ரன், பிரென்டன் மெக்குல்லம் 45 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய குப்டில் 9 ரன்னில் வெளியேறினார்.

எனினும், ரோஸ் டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூஸீலாந்து அணி வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. இதில் டெய்லர் 70 ரன்களில் ஆட்டமிழந்த போது நியூஸீலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் (39 ஓவர்களில்) எடுத்திருந்தது. கடைசி 11 ஓவர்களில் வெற்றி பெற 72 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்ததால் நியூஸீலாந்து தோல்வியை நோக்கிச் சென்றது.

ஆனால், 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்காட் ஸ்டைரிஸ் 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து நியூஸீலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். மறுமுனையில் ஷேன் பாண்ட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவுஸ்திரேலிய தரப்பில் போலிங்கர் 2 விக்கெட், ஹாரிஸ், ஜான்சன், ஜேம்ஸ் ஹோப்ஸ், வாட்ஸன், ஹவ்ரிட்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். நியூஸீலாந்து வீரர் ரோஸ் டெய்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]