| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| இங்கிலாந்து அணி, பங்களாதேஷை வீழ்த்தி வெற்றி |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 03:48.51 பி.ப GMT ] |
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கட்டுகளினால் வெற்றியீட்டியுள்ளது.பங்களாதேஷின் மிர்பூரில் உள்ள பங்களா தேசிய மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி, களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில், முஸ்பிகுர் ரஹ்மான் 76 ஓட்டங்களையும், இம்ருல் கயிஸ் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில், இங்கிலாந்து அணியின் சார்பில் ரிம் பென்சன் மூன்று விக்கட்டுகளையும், கிரஹம் ஸ்வான் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
261 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் பலர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றதனால், தோல்வியடைக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
எனினும், இயோன் மோர்கனின் அபார துடுப்பாட்டத் திறமையினால் இங்கிலாந்து வெற்றியீட்டியது.இங்கிலாந்து அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் இயோன் மோர்கன் 104 பந்துகளில் ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களையும், அலிஸ்டயா குக் 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீசு;சில் அப்துர் ரசாக் மற்றும் சகிபுல் ஹசன் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினர்.
சிறந்தத் துடுப்பாட்டத் திறமையின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற இயோன் மோர்கன் போட்டியின் ஆட்ட நாயகனாத் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இரண்டு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிப்பதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|