| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| சிம்பாப்வே அணியிடம் மேற்கிந்திய தீவுகள் அணி அதிர்ச்சித் தோல்வி |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 10:16.42 மு.ப GMT ] |
சிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டுவன்ரி‐20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.மேற்கிந்தியத் தீவுகளின் ட்னிடாட்டின் போர்ட் ஓப் ஸ்பெய்ன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய சிம்பாப்வே அணி 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இதில், மசகடாசா 44 ஓட்டங்களையும், எல்டன் சிக்கும்புரா 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் டெரன் சாமி 26 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கட்டுகளையும், சுலைமான் பென் 6 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 79 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இதில், தினேஷ் ரம்டின் 23 ஓட்டங்களையும், சந்தர்போல் 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில், கிரஹம் க்ரீமர் 11 ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுகளையும், கிரெக் லாம்ப் 14 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். சிறந்த பந்து வீச்சுத் திறமையை வெளிப்படுத்திய கிரஹம் க்ரீமர் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|