| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| உலக கோப்பை ஹாக்கி: இந்தியா அபார வெற்றி |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 10:07.01 மு.ப GMT ] |
உலக கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.உள்ளூர் சர்ச்சைகளை கடந்து சாதித்த இந்திய அணிக்கு சந்தீப் சிங் கைகொடுத்தார். இவர் இரண்டு கோல் அடித்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.
டில்லியில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று துவங்கியது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.
பலத்த பாதுகாப்பு:பயங்கரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து, போட்டி நடக்கும் தயான்சந்த் தேசிய மைதானம் உள்ளிட்ட பகுதிகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அதிரடி துவக்கம்
"பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே நிலைகுலைந்து போனது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்தியாவுக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதனை சிவேந்திர சிங் கோலாக மாற்ற, அரங்கில் குவிந்திருந்த இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் 35வது நிமிடத்தில் அம்பயர் மறுபரிசீலனை முறையில் "பெனால்டி கார்னர்' வாய்ப்பை இந்தியா பெற்றது. இதில் சந்தீப் சிங் ஒரு சூப்பர் கோல் அடிக்க, இந்திய அணி முதல் பாதி முடிவில் 2-0 என்ற முன்னிலை பெற்றது.
கோல் மழை
இரண்டாவது பாதி துவங்கியதும் பிரப்ஜோத் சிங்(37வது நிமிடம்) அசத்தல் கோல் அடித்தார். இதற்கு பின் போராடிய பாகிஸ்தான் மூன்று "பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை வீணடித்தது. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் சந்தீப் சிங் இரண்டாவது கோல் அடிக்க, இந்தியா 4-0 என்ற அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. பின் 60வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் பாகிஸ்தானின் சோகைல் ஆறுதல் கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 புள்ளிகளை பெற்றது.
பழி தீர்த்தது இந்திய அணி
கடந்த டிசம்பரில் அர்ஜென்டினாவில் நடந்த சாம்பியன்ஸ் சாலன்ஞ் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் 3-6 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இதற்கு இம்முறை நேற்று நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பழி தீர்த்துக்கொண்டது. தவிர, கடைசியாக நடந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இருந்த இந்திய அணி, நான்காவது மோதலில் பாகிஸ்தானை வெற்றி கண்டது.
'வீடியோ அம்பயர்' அறிமுகம்
உலக கோப்பை ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை(வீடியோ அம்பயர்) நேற்று அறிமுகமானது. இதன்படி அம்பயர் தீர்ப்பை எதிர்த்து இரு அணிகளும் தலா ஒருமுறை அப்பீல் செய்யலாம். இது வீரர்களுக்கு சாதகமாக அமைந்தால், மீண்டும் அப்பீல் செய்யலாம்.நேற்றைய தென் ஆப்ரிக்க, ஸ்பெயின் மோதிய போட்டியின் 44வது நிமிடத்தில், தென் ஆப்ரிக்க வீரர்கள் "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கோரினர். இதனை மலேசிய அம்பயர் அமர்ஜித் சிங் நிராகரித்தார். உடனே தென் ஆப்ரிக்கா சார்பில் "அப்பீல்' செய்யப்பட்டது. "ரீப்ளே' பார்த்த "வீடியோ அம்பயர்' ஜாம்சன் ஹமிஷ், "அப்பீலை' ஏற்றுக் கொண்டார். முதல் அப்பீல் சாதகமாக அமைந்ததால், தென் ஆப்ரிக்காவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோட்ரிகோ கார்சா அடித்த கோல் தவறானது என அப்பீல் செய்தது. பந்து உயரமாக சென்றதாக புகார் கூறியது. இதனை வீடியோ அம்பயர் நிராகரித்தார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|