துடுப்பாட்ட செய்தி
சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் வீரர்களுக்கு காத்திருக்கும் தண்டனை
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 04:44.36 பி.ப GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான படுதோல்வி தொடரை அடுத்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு , மூத்த பாகிஸ்தான் வீரர்களான கம்ரன் அக்மல், ஷோயப் மாலிக், ஷாகித் அஃப்ரீடி, ரானா நவேத் உல் ஹசன் ஆகியோருக்கும் இளம் வீரர் உமர் அக்மலுக்கும் தண்டனை வழங்கப்படவேண்டும் என்று தங்களது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தண்டனை அபராதம் முதல் ஓராண்டு தடை வரை இருக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அக்மல் சகோதரர்களுக்கு அபராதமும், ஷோயப் மாலிக் மற்றும் ரானா நவேத் ஆகியோருக்கு ஓராண்டு தடையும் விதிக்கப்படலாம் என்று அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
 
இந்த அறிக்கையை ஏற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தண்டனை வழங்கலாம் அல்லது எச்சரிக்கை மட்டும் விடுத்து விட்டு விடலாம். ஆனால் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த வித அதிகாரபூர்வ தகவல்களையும் இன்னும் வெளியிடவில்லை.
 
இந்த நிலைமையில் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஐயமும் தற்போது எழுந்துள்ளது.
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஜ் பட் நேற்று அணித் தேர்வுக் குழு கூட்டத்தில் இந்த அறிக்கையின் பல்வேறு விவரங்களை விவாதித்துள்ளதாக தெரிகிறது.
 
சிட்னி டெஸ்ட் போட்டியில் 5 வாய்ப்புகளை தவற விட்டு அணியை தோல்விக்கு இட்டுச் சென்ற விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல், அடுத்த போட்டியில் இடம்பெற மாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்துருந்தும் இவர் தன்னிச்சையாக தான் அணியில் இடம்பெறுவேன் என்று பேட்டியளித்தார். மேலும் இவரது சகோதரர் உமர் அக்மல், தன் சகோதரை நீக்கினால் தானும் விளையாடுவது சந்தேகம் என்பதை அறிவிக்கும் விதமாக பொய்க்காயத்தை காரணம் காட்டியதாக அப்போது செய்திகள் வெளிவந்தன.
 
இதனால் அக்மல் சகோதரர்களுக்கு 20 அல்லது 30 லட்சம் ரூபாய்கள் அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
 
ஷாகித் அஃப்ரீடி பந்தை வாயில் வைத்து கடித்ததால் அதே தொடரில் இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டார். இதனால் இவரையும் தண்டனைக்கு உள்ளாக்க பாகிஸ்தான் வாரியம் பரிசீலனை செய்து வருகிறது. இதனால் அவரது இருபதுக்கு 20 அணித் தலைமைப் பொறுப்பும் பறிபோகலாம் என்று தெரிகிறது.
 
ஆனால் ஷோயப் மாலிக், ரானா நவேத் கதை முற்றிலும் வேறானது. இருவரும் அணியில் கோஷ்டிகளை வளர்த்ததாகவும், கேப்டன் யூசுப்பிற்கு நெருக்கடி கொடுக்கும் வேலையைச் செய்ததாலும் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தடை அளவுக்குச் செல்லலாம் என்று கூறப்படுகிறது.
 
இந்த சர்ச்சைகளினால் நேற்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்படவில்லை. மேலும் 30 உத்தேச விரர்கள் கொண்ட பட்டியல் 21ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]