| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| ரவீந்திர ஜடேஜாவை நீக்கும் முடிவை மாற்ற முடியாது : பிசிசிஐ |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 02:25.40 பி.ப GMT ] |
ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காக ஐ.பி.எல். தொடரின் 3ஆம் பதிப்பில் இருந்து ரவீந்திர ஜடேஜாவை நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஏற்க மறுத்து விட்டது.ஐ.பி.எல் தொடருக்காக புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட உள்ளன. அந்த அணிகளை ஏலம் விடும் முறை பற்றி விவாதிக்க மும்பையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஐ.பி.எல். துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா, ரவீந்திர ஜடேஜாவை ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓராண்டு காலம் நீக்கும் முடிவை பரிசீலிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ. தலைவர் சஷாங்க் மனோகரிடம் கோரினார். ஆனால், அதனை ஏற்க மனோகர் மறுத்து விட்டார்.
முன்னதாக இந்த விவகாரம் பற்றி ஐ.பி.எல். தலைவர் லலித் மோடியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஜடேஜா விவகாரம் எனது கையை மீறிச் சென்று விட்டது. இதில் மனோகர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஒப்பந்தம் கடந்தாண்டு டிசமபர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வேறு அணியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஜடேஜா முயற்சி மேற்கொண்டதால் அவர் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாகக் கூறி ஐ.பி.எல். தொடரில் ஓராண்டு காலம் வரை விளையாடக் கூடாது என தடைவிதிக்கப்பட்டது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|