மென்பந்தாட்ட செய்தி
ஆஸி. ஓபன் டென்னிஸ்: ஃபெடரர், வெர்டாஸ்கோ முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 19 சனவரி 2010, 09:30.59 மு.ப GMT ]
ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் இரண்டாம் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் வெர்டாஸ்கோவும், நம்பர் 1 வீரர் ரோஜர் ஃபெடரரும் முன்னேறியுள்ளனர்.

தரநிலை 9ஆம் இடத்தில் உள்ள வெர்டாஸ்கோ, ஆஸ்ட்ரேலியாவின் கார்ஸ்டன் பால் என்பவரை 6- 7, 7- 6, 7- 5, 6- 2 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.

வெர்டாஸ்கோ 7 ஏஸ்களை அடிக்க பால் 13 ஏஸ்களை அடித்தார். இரட்டைத் தவறுகளிலும் இருவரும் சமமாகத் திகழ்ந்தனர். ஆனால் அறியாமல் ஏற்படும் பிழை என்ற வகையில் 63 முறை தவறிழைத்தார் பால். இதனால் பிரேக் பாயிண்ட்களை வெற்றியாக மாற்ற முடியாமல் போனது.

மற்றொரு ஆட்டத்தில் சுவிஸ். வீரர் ரோஜர் ஃபெடரர் அபாரமாக விளையாடி, ரஷ்யாவின் ஆந்த்ரீவ் என்பவரை 4- 6, 6- 2, 7- 6, 6-0 என்ற செட்களில் வீழ்த்தினார்.

முதல் செட்டில் இரட்டைத் தவறுகளை ஃபெடரர் செய்ததால் செட்டை இழந்தார். ஆனால் அதன் பிறகு சர்வீஸ், முன்னால் வந்து ஆக்ரோஷ டென்னிஸ் என்று ஃபெடரர் தனது ஷாட்களை ஆடியபோது ஆந்த்ரீவால் குறைவாகவே ஈடு கொடுக்க முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் கயெல் மான்ஃபீஸ் 6- 4, 6- 4, 6- 4 என்ற செட் கணக்கில் ஆஸ்ட்ரேலிய வீரர் எப்டென் என்பவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ரஷ்ய வீரர் நிகோலே டேவிடென்கோ (6), ஜெர்மனி வீரர் டைட்டர் கின்டிமேன் என்பவரை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஜார்கோ நைமினென், குர்ஷியாவின் மாரின் சிலிச், ஜெர்மனியின் ரைனர் ஷட்லர், அமெரிக்க வீரர் ஜேம்ஸ் பிளேக், செக். வீரர் டொமாஸ் பெர்டிச், சுவிஸ். வீரர் வார்வின்கா ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]