| | | |
| |
| | | |
| |
| உதைப்பந்தாட்ட செய்தி |
| டியாகோ மரடோனாவின் காதணிகள் 25000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது |
| [ வெள்ளிக்கிழமை, 15 சனவரி 2010, 01:13.20 பி.ப GMT ] |
உலகின் புகழ்பூத்த கால்பந்தாட்ட நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் ஆர்ஜன்டீனாவின் முன்னாள் தலைவரும், தற்போதைய பயிற்றுவிப்பாளருமான டியாகோ மரடோனாவின் காதணிகள் 25000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இத்தாலியில் நடைபெற்ற ஏல விற்பனையில் மரடோனாவின் காதாணிகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதன் உண்மைப் பெறுமதியிலும் ஐந்து மடங்கு அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொல்சோனா நகரைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஒருவரினால் குறித்த காதணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த வருடம் மருத்துவ சிகிச்சைக்காக மரடோனா இத்தாலி சென்றிருந்த போது குறித்த காதணியை அந்நாட்டு காவல்துறையினர் மரடோனாவிடமிருந்து கைப்பற்றினர்.
வரி ஏய்ப்பில் ஈடுபட்ட குற்றத்திற்காக மரடோனாவின் காதணிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆர்ஜன்டீனாவைச் சேர்ந்த முக்கிய கால்பந்தாட்ட நடச்த்திரங்கள் பலர் இத்தாலியில் வரி நிலுவைகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலிய சட்ட திட்டங்களின் அடிப்படையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|