| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| சர்வதேச கார் பந்தயம் : நடிகர் அஜீத் பங்கேற்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2010, 12:49.48 பி.ப GMT ] |
எம்.ஆர்.எப். சர்வதேச கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் 3-வது மற்றும் கடைசி சுற்று பந்தயம் சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் இன்று நடந்தது.முதல் போட்டியாக 115 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் நடந்தது.அதைத் தொடர்ந்து எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயம் நடந்தது.
இதில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்றார். 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கார்பந்தயத்தில் கலந்து கொள்வதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.
பந்தயம் 15 ரவுண்டுகளை கொண்டது. ஆனால் அஜீத்குமார் சென்ற கார் முதல் ரவுண்டிலேயே பழுதாகி நின்று விட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத் துடன் கூச்சல் போட்டனர்.
அந்த பந்தயம் முடிந்தபிறகு அஜீத் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் ? மணி நேரம் போட்டி நடைபெறுவது பாதிக்கப்பட்டது.
மாலையில் நடைபெறும் எம்.ஆர்.எப். பார்முலா 1600 பந்தயத்தில் (15 ரவுண்டு) கலந்து கொள்ளப் போவதாக அஜீத்குமார் அறிவித்தார்.
காலையில் நடந்த எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயத்தில் சென்னை வீரர் அஸ்வின் வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த உட்டன் 2-வது இடத்தையும், பார்த்திவா கமரஸ்வரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|