| | | |
| |
| | | |
| |
| உதைப்பந்தாட்ட செய்தி |
| முகேஷ் அம்பானியன் பார்வை!..லிவர்பூல் கால்பந்து அணி |
| [ புதன்கிழமை, 17 பெப்ரவரி 2010, 12:03.23 பி.ப GMT ] |
ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியை வாங்கிய “ரிலையன்ஸ்’ முகேஷ் அம்பானியன் பார்வை, தற்போது கால்பந்து பக்கம் திரும்பியுள்ளது. இவர், சர்வதேச அளவில் மிகப் பிரபலமான லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் பங்குகளை வாங்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை முகேஷ் அம்பானி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப் லிவர்பூல். பிரிமியர் லீக், எப்.ஏ., கோப்பை, உய்பா, ஐரோப்பிய கோப்பை உட்பட 18 முறை பட்டம் வென்று சாதித்துள்ளது.
ஸ்டீவன் ஜெரார்டு, பெர்னாண்டோ டோரஸ் போன்ற முன்னணி வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2008ல் “போர்ப்ஸ்’ வர்த்தக பத்திரிகையின் கணிப்பின்படி, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், ஆர்சனல் ஆகிய கால்பந்து கிளப் அணிகளுக்கு பிறகு நான்காவது விலையுயர்ந்த அணியாக லிவர்பூல் கருதப்பட்டது.
நிதி நெருக்கடி
இப்படி புகழின் உச்சியில் இருந்த லிவர்பூல் அணி, சமீப காலமாக சரிவை சந்தித்தது. இதற்கு அணியின் உரிமையாளர்களான அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் கில்லட் மற்றும் டாம் ஹிக்ஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் முக்கிய காரணம்.
ரசிகர்களின் ஆதரவும் குறைந்த போக, சுமார் ஆயிரத்து 700 கோடி ரூபாய் கடனில் சிக்கியது. இதையடுத்து அணியின் 51 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டது.
இதனை வாங்க, இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவன அதிபரும் உலகின் 7வது பணக்காரருமான முகேஷ் அம்பானி மற்றும் சஹாரா நிறுவனத்தின் சுப்ரதோ ராய் ஆகியோர் முயற்சி செய்வதாக லண்டனில் இருந்து வெளியாகும் “டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இதையடுத்து ஐ.பி.எல்., மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ள முகேஷ் அம்பானி, கால்பந்து அரங்கிலும் கால்பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லிவர்பூல் தொடர்பான செய்தியை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இதன் செய்தி தொடர்பாளர் சுதீப் புர்கயஸ்தா கூறுகையில்,”"லிவர்பூர் பங்குகளை வாங்குவது தொடர்பான செய்தி தவறானது. இதனை முழுமையாக மறுக்கிறோம்,” என்றார்.
சஹாரா நிறுவன செய்தி தொடர்பாளர் அபிஜித் சர்கார் கூறுகையில்,"தற்போது கருத்து தெரிவிக்கும் நிலைமையில் இல்லை”என்றார்.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|