| | | |
| |
| | | |
| |
| மென்பந்தாட்ட செய்தி |
| ஆஸ்ட்ரேலிய ஓபன் : கிளைஸ்டர்ஸ் படுதோல்வி |
| [ சனிக்கிழமை, 23 சனவரி 2010, 04:37.40 பி.ப GMT ] |
 ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகியிருந்த கிளைஸ்டர்ஸ், கடந்தாண்டு மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினார். ஆஸ்ட்ரேலிய ஓபன் 2009 சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் தனது மறு வருகையை ஆணித்தரமாக உணர்த்தினார்.
நேற்று நடந்த 3வது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் நாடியா பெட்ரோவா உடன் கிளைஸ்டர்ஸ் மோதினார். இதில் கிளைஸ்டர்ஸ் நிறைய தவறுகளை செய்ததால் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. கிளைஸ்டர்ஸ் செய்த ‘அன்ஃபோர்ஸ்டு எரர்’கள் மட்டும் 26. இதுதவிர 4 முறை `டபுள்ஃபால்ட்' செய்தார்.
மொத்தம் 52 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த மோதலில் நாடியா பெட்ரோவா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். கிளைஸ்டர்ஸுக்கு எதிராக பெட்ரோவா பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
இப்போட்டியில் நடந்த 2 செட் ஆட்டத்திலும், கிளைஸ்டர்ஸ் ஒரே ஒரு கேம் மட்டுமே வென்றார். இது அவரது டென்னிஸ் வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்வியாக கருதப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|