| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| உலகக் கிண்ண ஹொக்கி நாளை ஆரம்பம் |
| [ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010, 07:18.04 மு.ப GMT ] |
உலகக் கிண்ண ஆண்கள் ஹொக்கி போட்டி டில்லியில் நாளை முதல் மார்ச் 13ஆந் திகதி வரை நடைபெறுகிறது. 12 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்திய அணி நாளை தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.இது குறித்து இந்திய அணித் தலைவர் ராஜ்பால்சிங் கூறுகையில்,
"கடைசி கட்டத்தில் நமது அணி கோல் வாங்குவது மனோரீதியான தாக்கத்தால் நடக்கும் செயலாகும். இந்தக் குறையை தவிர்க்க நாங்கள் கவனம் செலுத்தி பயிற்சி எடுத்தோம். அதில் நாங்கள் முன்னேற்றம் கண்டிருப்பதாக நினைக்கிறேன்.
கடைசி கட்டத்தில் எதிரணியினர் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலைக்குப் பதிலாக தற்போது நாங்கள் கடைசி கட்டத்தில் கோல் அடிக்கும் நிலைக்கு முன்னேறி இருக்கிறோம். அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது எங்கள் இலக்காகும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அரை இறுதிக்கு முன்னேறி விட்டால் எந்த அணியும் கோப்பையை வெல்லக்கூடும்.
போட்டிக்கு நன்றாக தயாராகி இருக்கிறோம். நெருக்கடி இருப்பது நல்லது தான். இது உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக செயல்பட உந்துதலாக இருக்கும். சிறப்பாக செயல்பட்டால் குறைந்தபட்சம் அரை இறுதிக்காவது முன்னேறலாம். அது இந்திய ஹொக்கிக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்" என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|