உதைப்பந்தாட்ட செய்தி
ஆபிரிக்க கிண்ணப் போட்டிகளில் விளையாட டொகோ அணிக்குத் தடை
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 04:33.16 பி.ப GMT ]
ஆபிரிக்கக் கிண்ண போட்டிகளில் விளையாட டோகோ அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் இரண்டு ஆபிரிக்கக் கிண்ணப் போட்டிகளில் விளையாட முடியாது என டொகோ அணிக்கு ஆபிரிக்க கால்பந்தாட்டப் பேரபை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வருடம் நடைபெற்ற ஆபிரிக்கக் கிண்ணப் போட்டிகளை டொகோ பகிஷ்கரிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டித் தொடரை பகிஷ்கரித்த குற்றத்திற்காக டொகோ தேசிய அணிக்கு 50,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அங்கோலா நாட்டில் வைத்து தமது அணி வீரர்கள் பயணித்த பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து டொகோ கழகம் போட்டிகளை பகிஷ்கரிக்கத் தீர்மானித்தது.

அணியுடன் பயணம் செய்த இரண்டு உத்தியோகத்தர்கள் இந்தத் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எனினும், ஆபிரிக்க கால்பந்தாட்டப் பேரவையின் இந்தத் தீர்மானம் தொடர்பில் டொகோ அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மனித உயிர்களின் பெறுமதி அறியாத வகையில் ஆபிரிக்க கால்பந்தாட்டப் பேரவை செயற்பட்டு வருவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு செய்யும் அவதூறாக இந்தத் தீர்மானத்தை கருதுவதாக டொகோ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது,

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது
T20 : பாகிஸ்தான் அணி தோல்வி
பாக். வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை: ஊழல் தடுப்புக்குழு அதிரடி
ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் பகிரங்க அறிவிப்பு
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்]
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ]
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ]
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்]
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]