உதைப்பந்தாட்ட செய்தி
ஆபிரிக்க கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு எகிப்தும், கானாவும் தகுதி
[ வெள்ளிக்கிழமை, 29 சனவரி 2010, 09:27.14 மு.ப GMT ]
ஆபிரிக்கக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு எகிப்து மற்றும் கானா ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.  அரையிறுதிப் போட்டியில் அல்ஜீரிய அணியை வீழ்த்தியதன் மூலம் எகிப்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அல்ஜீரிய அணியை வீழ்த்தி எகிப்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

எகிப்து தொடர்ந்து மூன்றாவது தடவையாக ஆபிரிக்க கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு சுவராஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன.

அல்ஜீரிய அணி எட்டு வீரர்களுடனேயே எகிப்துடன் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக விளையாடிய காரணத்தினால் அல்ஜீரிய அணியின் கோல் காப்பாளர் உள்ளிட்ட மூன்று வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதேவேளை, கானா மற்றும் நைஜீரிய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் கானா அணி வெற்றியீட்டியது.

1992ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக கானா ஆபிரிக்கக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இம்முறை பங்கேற்க உள்ளது.

கானா அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பலம்பொருந்திய நைஜீரிய அணியை வீழ்த்தியுள்ளது.

போட்டியின் 21 ஆவது நிமிடத்தில் கானாவின் காயான் என்ற வீரர் போட்டியில் போடப்பட்ட ஒரே கோலைப் போட்டார்.

கானா அணியின் கோல் காப்பாளர் ரச்சர்ட் கிங்ஸன் மிகச் சிறப்பான முறையில் விளையாடி பல கோல்களை தடுத்து நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]