| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| சச்சினுக்கு பாரத ரத்னா விருது? |
| [ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2010, 02:18.38 பி.ப GMT ] |
கிரிக்கெட் விளையாட்டின் ‘கோஹினூர்’ வைரம் சச்சின் டெண்டுல்கர் என்று புகழாரம் சூட்டியுள்ள வடேகர், அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக பி.டி.ஐ.க்கு வடேகர் அளித்துள்ள பேட்டியில்,
“கிரிக்கெட்டின் கோஹினூர் வைரமாக சச்சின் திகழ்கிறார். அவரிடம் அளப்பரியாத திறமை புதைந்துள்ளது. அவரைப் போல் இன்னொரு வீரரை நாம் எப்போதும் காண முடியாது. அவர் பாரத் ரத்னா விருது பெற வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
வடேகரின் கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்த கபில்தேவ்,
“நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவைப் பெற சச்சின் தகுதியானவர்” எனக் கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் சச்சின் பல சிகரங்களை எட்டியுள்ளதாகவும், அவருக்கு பாரத் ரத்னா விருது சிறந்த கௌரவமாக இருக்கும் என்றும் கபில் தெரிவித்துள்ளார்.
குவாலியரில் கடந்த 24ஆம் தேதி தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்களைக் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இரட்டைச் சதம் விளாசிய வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை சச்சின் பெற்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|