துடுப்பாட்ட செய்தி
T20 : நியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்திய அவுஸ்திரேலியா
[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010, 07:05.17 மு.ப GMT ]
முதலாவது டுவன்ரி‐20 போட்டியில் நியூசிலாந்து அணியை ஆறு விக்கட்டுகளால் வீழ்த்தி அவுஸ்திரேலியா இலகு வெற்றி ஈட்டியுள்ளது.

நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பெக் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில், ஜேம்ஸ் பிராங்கிலின் 43 ஒட்டங்களையும், மார்டீன் குட்பில் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மிச்சல் ஜோன்சன் 19 ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுகளையும், ஷோன் டெய்ட், டெரிக் டென்னிஸ் மற்றும் ஷேன் வெட்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.

119 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 16 ஒவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் சார்பில் டேவிட் ஹசீ 46 ஒட்டங்களையும், டேவிட் வோர்னர் மற்றும் ஷேன் வெட்சன் ஆகியோர் தலா 19 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஷேன் பொன்ட் இரண்டு விக்கட்டுகளையும், டெனியல் விட்டோரி மற்றும் நெதன் மெக்கலாம் ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.

அபார பந்து வீச்சுத் திறமையை வெளிப்படுத்திய மிச்சல் ஜோன்சன் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]