மென்பந்தாட்ட செய்தி
செரீனா, ஹெனின் இறுதிக்குத் சுற்றுக்கு தகுதி
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 10:58.40 மு.ப GMT ]
மெல்பர்னில் நடந்து வரும் ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், பெல்ஜியம் வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் முன்னேறியுள்ளனர்.

இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை லி-னாவை எதிர்த்து செரீனா விளையாடினார். இருவருமே சிறப்பாக விளையாடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் செரீனா போராடி வென்றார்.

இதையடுத்து நடந்த 2வது செட் ஆட்டத்திலும் கடுமையான போட்டி நிலவியது. டை-பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7-6 (7-1) என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு செரீனா முன்னேறினார்.

ஹெனின் அசத்தல் வெற்றி

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஷெங்-ஜி உடன் மோதிய ஹெனின் மிக அபாரமாக விளையாடி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு சீன வீராங்கனை 2 பேர் முன்னேறியது இதுவே முதல் முறை என்ற போதிலும், இருவருமே அரையிறுதிச் சுற்றில் வெளியேறியதால் சீன ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]