| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| சுவிற்சர்லாந்தில் நடத்தபட்ட Cats Cup 2010 Zürich சதுரங்க சுற்றுப் போட்டிகள் |
| [ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 06:13.28 பி.ப GMT ] |
24.01.2010 ஞாயிற்றுக்கிழமை Zurich நகரில் சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் நடத்தபட்ட Cats Cup 2010 Zürich சதுரங்கபோட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.ஆரம்ப நிகழ்வாக அமைதி வணக்கம், தொடர்ந்து பிரதம வருந்தினராக வருகைதந்த ஆர்கவ் மானில சதுரங்க தலைவர் திரு Markus Regaz அவர்களும், Zürich Riesbach சதுரங்கப்பயிற்சியாளர் திரு Faässler Armin அவர்களும், திரு பார்திபன் அவர்களும் மங்களவிளக்கேற்றி போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர். காலை 10.30 மணிக்கு போட்டிக்கான ஆரம்ப நிகழ்வுகள் தொடங்கின.
போட்டிகளின் விதிமுறைகள் தொடர்பான விளக்கத்தினை போட்டி நடுவர்களில் ஒருவரான கந்தையா சிங்கம் விளக்கிக்கூறியதை அடுத்து முதல்சுற்று ஆரம்பமானது. போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன. திட்டமிட்டபடி குறிப்பிட நேரத்தில் ஒவ்வொரு சுற்றுக்களும் நிறைவு பெற்று அடுத்தடுத்த சுற்றுக்களை ஆரம்பமாகின.
ஒவ்வொரு சுற்றுகளின் இறுதியிலும் போட்டியாளர்கள் பெற்ற புள்ளிகளும் அடுத்து சுற்று பற்றிய விபரங்களும் அறிவித்தல் பலகையில் வெளியிடப்பட போட்டியாளர்கள் மத்தியில் விறுவிறுப்பு அதிகமாகியது.
நடுவர்களாக திரு கந்தையா சிங்கம் திரு சிவசுப்பிரமணியம் சிவாஜி ஆகியோர் சிறப்பாக கடமையாற்றி போட்டியாளர்களை நெறிப்படுத்தினர். 16.00 மணிக்கு ஆரம்பமான இறுதிச்சுற்று 16.40 மணிக்கு நிறைவடைய போட்டியாளர்களிடையே வெற்றிகிண்ணத்தை பெறுவர்கள் பற்றிய எதிர்பார்ப்பு நிலவியது.
பரிசளிப்பு வைபவம் 17.00 மணிக்கு தொடங்கியது. நன்றியுரையை தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கபட்ட வெற்றி பெற்றவர்கள் விபரங்கள் அறிவிக்கபட்டு அவர்களிற்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கபட்டன.
இந் நிகழ்வினை சுவிஸ் தமிழர் சதுரங்க சம்மேளனத்தின் தலைவர் திரு சுபாஸ்சந்திரபோஸ் சிவகுமார் அவர்கள் மிகவும் அழகாக தொகுத்து நடத்தியது பாராட்டத்தக்கது.
பரிசில் பெற்றோர் விபரம்
பரிசில் பெற்றோர் விபரம்
10 வயதுப்பிரிவில் முதலாமிடத்தினை செல்வன் அருண் ஆனந்தன் Denamark பெற்றார்.
13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலாமிடத்தினை செல்வன் அச்சுதன் சிறிரஞ்சன் Egg CH பெற்றார்.
16 வயதுப்பிரிவில் முதலாமிடத்தினை செல்வன் அஜந்தன் தனபாலசிங்கம் Germany பெற்றார்.
வளர்ந்தோர் பிரிவில் முதலாமிடத்தினை திரு அன்ரன் ஜோர்ச் Luzern CH
பெற்றார்.
ஒவ்வொரு பிரிவிலும் முதலாமிடத்தை பெற்றவர்களுக்கு
வழங்கி கெளரவித்தனர்.
U 10
அருண் ஆனந்தன் Denamark
அஸ்வின் சன்முகநாதன் Pfäffikon CH
ஜனுசன் சத்தியதாசன் Aarau CH
U 13
அச்சுதன் சிறிரஞ்சன் Egg CH
கிருசாத் சிவானந்தம் Bärau CH
சிந்துஜன் சிவயோகராசன் Brunnen CH
U16
அஜந்தன் தனபாலசிங்கம் Germany
மௌலிகரன் குருபரன் Esholzmatt CH
பிரதூசன் சத்தியதாசன் Aarau CH
Over 16
அன்ரன் ஜோர்ச் Luzern CH
தில்லராஜ் சகாதேவன் Aarau CH
குகனேசன் தியாகராசா Untersieggenthal CH
ரட்ணம் சசிகுமார் Glarus CH
லுகிர்தன் முருகானந்தராஜா Biel CH
Best Woman U16
சிறந்த பெண் போட்டியாளர்
தர்சிகா லோகநாதன் Aarau CH
Best Woman Over 16
சிறந்த பெண் போட்டியாளர்
திருமதி சுஜாதா மகேந்திரராஜா Zürich CH |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|