| | | |
| |
| | | |
| |
| மென்பந்தாட்ட செய்தி |
| சானியா மிர்ஸா - முகம்மது சோரப் நிச்சயதார்த்தம் ரத்து |
| [ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 11:02.07 மு.ப GMT ] |
மனப் பொருத்தம் இல்லாத காரணத்தால் முகம்மது சோரப்புடன் செய்து கொண்ட திருமண நிச்சயத்தை ரத்து செய்துள்ளதாக இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சானியா மிர்சா அளித்துள்ள பேட்டியில், “கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் (சோரப்) நல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு இருவரும் மனதளவில் பொருத்தம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே திருமண வாழ்வில் ஒன்றாக இருக்க முடியாத காரணத்தால் பிரிய முடிவு செய்துள்ளோம். வாழ்க்கையில் சிறந்து விளங்க சோரப்புக்கு என் வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் கடந்தாண்டு ஜூலையில் சானியா-சோரப் இடையே நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் பேட்டியளித்த சானியா, “திருமணத்திற்குப் பிறகு டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|