| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| சிக்சர் அடிக்கும் ரகசியம்: பிறந்தநாளில் அறிவித்த கெய்ல் |
| [ சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012, 05:40.45 மு.ப GMT ] |
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல், தனது அதிரடி ஆட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல், நேற்று தனது 33 பிறந்தநாளை கொண்டாடினார். இவரது இமாலய சிக்ஸர்களுக்கு, ரசிகர்களிடையே தனி மரியாதை உண்டு.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் சரியான உடல் சமநிலை கொண்ட எந்த வீரருக்கும், அதிரடியாக துடுப்பெடுத்தாடுவது எளிது என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒரு கிரிக்கெட் வீரரின் முக்கிய திறமையே அவரது உடல் சமநிலை தான். கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக ஆடி பல சிக்ஸர்களை அடிக்க வேண்டுமானால், சிறந்த உடல் சமநிலையை பெற்றிருக்க வேண்டும்.
இந்த காலத்தில் சிக்ஸர் அடிப்பது என்பது ஒரு பெரிய காரியம் அல்ல, எல்லா வீரர்களும் சிக்ஸர் அடிக்கிறார்கள். முதலில் ஆடுகளத்தில் நிலைத்து விட்டால், அதன்பின்பு பந்துவீச்சாளர்களை எதிர்த்து அதிரடியாக ஆடுவது எளிது.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதல் லீக் போட்டி எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இப்போட்டியில் வெற்றி பெற்றால், மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் பெரியளவில் கொண்டாட உள்ளோம் எனவும் கூறினார்.
இவர் சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல் போட்டியில் அதிக சிக்சர் மற்றும் ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:21.02 மு.ப ] |
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ] |
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] | | 4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ] |
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்] | | ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ] |
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்] | | ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ] |
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|