துடுப்பாட்ட செய்தி
நியூசிலாந்து அணியை 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா
[ சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, 11:21.48 மு.ப GMT ]

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொழும்புவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 83 ஓட்டங்களுக்கு பரிதாபமாக சுருண்டது.

வார்னர் தொடக்கத்தில் அதிரடி ஆட்டம் ஆடினார் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ஓட்டங்கள் எடுத்து வெட்டோரியிடம் ஆட்டமிழந்தார்.

பின்பு மைக் ஹஸ்சி 5 ஓட்டங்கள், ஒயிட் 8 ஓட்டங்கள், பெய்லி 3 ஓட்டங்கள் என்று அடுத்தடுத்து ஆட்டமிழக்க 10 ஓவர்களில் 62/4 என்று ஆனது.

வாட்சன் 27 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். 12வது ஓவரின் முதல் பந்தில் அவுஸ்திரேலியா 71/5 என்று சரியும் அபாயத்தில் இருந்தது.

கடைசியில் மேக்ஸ்வெல் 24 ஓட்டங்களையும், மேத்யூ வேட் 25 ஓட்டங்களையும் எடுக்க அவுஸ்திரேலியா ஒருவழியாக 139 ஓட்டங்களை எட்டியது.

இதனையடுத்து 140 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து பரிதாபகரமாக தோல்வியடைந்தது.

பிரெண்டன் மெக்கல்லம் அணியில் இல்லை. இதனால் நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தில் தடுமாறியது.

வில்லியம்சன் 17 ஓட்டங்களும், அணித்தலைவர் ராஸ் டெய்லர் 22 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக பிராட் ஹாக் 3 விக்கெட்டுகளையும், வாட்சன், மெக்காய், கமின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கோஹ்லி, ஹர்பஜன் எனக்கு நெருக்கமானவர்கள்: விண்டூ சிங்
ஸ்ரீசாந்த் மற்றொரு தோழிக்கும் ஒரு செல்போன் பரிசு: பொலிசார் பறிமுதல்
தங்கநகை, பரிசுகள் வேண்டாம் என்று தப்பியோடிய பாகிஸ்தான் நடுவர்
பி.சி.சி.ஐ தலைவர் பதவியலிருந்து சீனிவாசன் விலக வேண்டும்: வலுக்கிறது எதிர்ப்பு
ஐபிஎல் சூதாட்டம்: சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் கைது
இறுதி சுற்றுக்குள் நுழைந்தது மும்பை அணி: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்(வீடியோ இணைப்பு)
தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் ஐ.பி.எல். வீரர்களுக்கு கட்டுப்பாடுகள்
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ? பொலிசார் திடுக்கிடும் தகவல்
சூதாட்டம் இறப்பிற்கு சமமானது: டிராவிட்
சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா?
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: சட்டத்தரனி பரபரப்பு குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:15.59 மு.ப ]
ஸ்ரீசாந்த் குறித்த செய்திகளை பத்திரிக்கைகளுக்கு பொலிசாரே கசிய விடுவதாக அவரது சட்டத்தரனி ரிபெக்கா ஜான் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
ஐ.பி.எல். தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:13.15 பி.ப ]
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. [மேலும்]
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:39.42 மு.ப ] []
ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் பாலிவுட் நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார். [மேலும்]
சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:57.07 மு.ப ] []
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது. [மேலும்]