துடுப்பாட்ட செய்தி
வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 03:05.43 பி.ப GMT ]
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கையில் நடைபெற்று வரும் 4வது டி20 உலகக் கிண்ணத் தொடரின் 5வது லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இன்று மோதின.

பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வங்கதேச அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய மார்டின் கப்தில் 11 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ரஸாக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் பிராங்களின் 35 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய மெக்கல்லம் 11 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் சதம் கடந்து 123 ஓட்டங்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து 192 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

அதிகபட்சமாக நசிர் ஹொசைன் 50 ஓட்டங்களும், அஷ்ரபுல் 21 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக கைல் மில்ஸ், டிம் சவுத்தி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் கடந்த மெக்கல்லம் ஆட்டநாயகனாக தெரிவானார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சொந்தமாக சூதாட்ட கம்பேனி தொடங்கிய ஸ்ரீசாந்த்
'குவாலிபையர்-2' ஆட்டத்திற்குள் நுழைந்தது ராஜஸ்தான்: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் (வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல் எலிமினேட்டர்: துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத்
பிரெஞ்ச் ஓபனிலிருந்து முர்ரே விலகல்
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த்
சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்
ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம்
சாதிக்க வேண்டிய கட்டயாத்தில் ராஜஸ்தான்? பிளேஆப் சுற்றில் ஐதராபாத்துடன் இன்று மோதல்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:21.02 மு.ப ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ]
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ]
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்]
ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ]
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்]
ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ]
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்]