இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணிக்கெதிரான இலங்கை அணி வீரர்கள் பட்டியலில் டில்ஹார பெர்ணான்டோ, சஜீவ வீரக்கோன் ஆகியோர் நிக்கப்பட்டுள்ளனர்.இந்திய, இலங்கை அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கெதிரான சர்வதேசப் போட்டி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள அணியில் பாகிஸ்தான் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த டில்ஹார பெர்ணான்டோ, நுவான் பிரதீப், சஜீவ வீரக்கோன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அத்தொடரில் விளையாடாத சாமர கப்புக்கெதர மற்றும் ஒருநாள் தொடரின் பிற்பகுதியில் நீக்கப்பட்டிருந்த ரங்கன ஹேரத் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டிகள் விபரம்:
முதல் ஒருநாள் போட்டி - 21ம் திகதி - ஹம்பாந்தோட்டை மைதானம்.
2வது ஒருநாள் போட்டி - 24ம் திகதி - ஹம்பாந்தோட்டை மைதானம்.
3வது ஒருநாள் போட்டி - 28ம் திகதி - கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்.
4வது ஒருநாள் போட்டி - 31ம் திகதி - கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம்.
5வது ஒருநாள் போட்டி - ஓகஸ்ட் 4ம் திகதி - பல்லேகல மைதானம்.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணி:
மஹேல ஜெயவர்த்தன (அணித்தலைவர்), ஏஞ்சலோ மேத்யூஸ், திலகரட்ண டில்ஷன், குமாரா சங்கக்காரா, உபுல் தரங்கா, டினேஷ் சண்டிமால், நுவான் குலசேகர, திஸ்ஸர பெரேரா, லஹிரு திரிமன்ன, லசித் மலிங்கா, சாமர கப்புக்கெதர, ரங்கன ஹேரத், சச்சித்திர சேனநாயக்க, ஜீவன் மென்டிஸ், இசுரு உதான. |