| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| விரைவில் டெஸ்ட் போட்டிகளில் மலிங்க பங்கேற்பார்: பயிற்சியாளர் நம்பிக்கை |
| [ வெள்ளிக்கிழமை, 29 யூன் 2012, 01:55.55 பி.ப GMT ] |
டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மீண்டும் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக்க ராமநாயக்க தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த முழங்கால் பிரச்னை காரணமாக 2011ஆம் ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக லசித் மலிங்க அறிவித்தார்.
இவர் இறுதியாக 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சம்பக்க ராமநாயக்க கூறுகையில், லசித் மலிங்கவின் உடல்நிலை அதியுச்ச நிலையை அடையுமாயின் அவர் நிச்சயமாக டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.
மேலும் தனது முழங்கால் பிரச்னை அதிகமானால் 3 விதமான போட்டிகளில் இருந்தும் விலக வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று அஞ்சி, தான் டெஸ்ட் போட்டியில் இருந்து லசித் மலிங்க வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
லசித் மலிங்க தனது உடற்தகுதி தொடர்பாக அதிக கவனத்துடன் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த அவர், லசித் மலிங்க ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டியில் விளையாடினாலே தான் மகிழ்ச்சியடைவேன் எனத் தெரிவித்தார்.
ஏனெனில் விளையாடும் அந்தப் போட்டியில் அவர் இலங்கைக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார் என தான் எண்ணுவதாகவும் தெரிவித்தார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஐ.பி.எல் சூதாட்டம் நடந்தது எப்படி? வீடியோ மூலம் விளக்கிய பொலிஸ் கமிஷனர் (வீடியோ இணைப்பு) |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:19.17 பி.ப ] [ ] |
டிகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிக வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இந்த சூதாட்டத்தின் முக்கிய புள்ளி வெளிநாட்டில் இருந்துக் கொண்டு செயல்பட்டதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். [மேலும்] | | பொல்லார்ட் செய்கை கோழைத்தனமானது: டிராவிட் |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 12:39.03 பி.ப ] [ ] |
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி மும்பை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்] | | ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட்பிக்சிங்: ஷில்பா ஷெட்டி அதிர்ச்சி |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 12:07.59 பி.ப ] |
ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த் உட்பட 3 வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | டோனியும், ஹர்பஜனும் என் மகன் வாழ்க்கையை ஒழிக்க முயல்கின்றனர்: ஸ்ரீசாந்த் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:23.55 மு.ப ] |
இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனியும், ஹர்பஜன் சிங்கும் சேர்ந்து என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை ஒழித்துக் கட்டப் பார்க்கின்றனர் என்று ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] | | சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு செல்லும் இந்திய அணி பலமானது: ஸ்டெயின் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:02.58 மு.ப ] |
ஷேவாக், யுவராஜ், கம்பீர் இல்லாவிட்டாலும் இங்கிலாந்தில் நடைபெறும் மினி உலகக் கிண்ணத்துக்குச் செல்லும் இந்திய அணி பலமான அணியே என்று தென் ஆப்ரிக்க, சன் ரைசர்ஸ் வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் கருத்துத் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|