| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| இந்தியாவுக்கெதிராக அதிக தவறுகளை செய்து விட்டோம்: ஜெயவர்த்தன |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 02:17.02 பி.ப GMT ] |
இந்தியாவிற்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தாங்கள் அதிக தவறுகளை செய்ததாக இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
தோல்வி குறித்து இலங்கை அணியின் அணித்தலைவர் கூறுகையில், இந்தியா போன்ற பலமானதொரு அணிக்கெதிராக அதிக தவறுகளை விட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இறுதி ஓவர்களில் அதிக ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது அணிக்குப் பாதமாக அமைந்தது எங்கள் தவறு தான் என்றார்.
இலங்கை அணியில் அடித்தாடக் கூடிய வீரர்கள் உள்ளார்கள். எனினும் அவர்களுக்கு அதிக ஓட்டங்களை, குறைந்த ஓவர்களில் பெற வேண்டிய நிலையிலேயே போட்டியைக் கையளித்ததாக மஹேல தெரிவித்தார்.
சங்கக்காரா சிறந்த அடித்தளமொன்றைப் பெற்றுக் கொடுக்க முனைந்து கொண்டிருந்தார் எனவும், எனினும் இறுதி 10 ஓவர்களில் துடுப்பெடுத்தாடும் போது போட்டி இந்திய அணியின் பக்கமே காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
நேற்றைய போட்டியில் இலங்கை அணி இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாட வேண்டி ஏற்பட்ட நிலையில் அதுவும் இலங்கை அணிக்குப் பாதகமாக அமைந்திருந்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றது இந்திய அணிக்கு மேலும் சாதகமாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்தார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 12:24.42 பி.ப ] |
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார். [மேலும்] | | நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 11:06.38 மு.ப ] |
நான் அப்பாவி, நான் ஒரு தவறும் அறியாதவன், நான் எந்த விதமான சூதாட்ட விடயத்திலும் ஈடுபட்டவனில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். [மேலும்] | | சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 07:40.46 மு.ப ] |
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை வீழ்த்தி தொடர்ந்து 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. [மேலும்] | | ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு? |
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:16.51 மு.ப ] [ ] |
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் தாராசிங்கின் மகன் வின்டூ ரந்தவா சென்னை அணி உரிமையாளரின் உறவினரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. [மேலும்] | | மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:14.04 மு.ப ] |
கேரளாவில் மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இரும்பணம் என்ற ஊரில் மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்து வந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|