துடுப்பாட்ட செய்தி
டி20 உலகக் கிண்ணமே எனது இலக்கு: யுவராஜ் சிங் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 07:04.06 மு.ப GMT ]
இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன் என்று இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு உலகக் கிண்ண தொடரில் தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

அதன்பின்பு அவர், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இரண்டு மாத கீமோதெரபி சிகிச்சை பெற்று திரும்பினார்.

தற்போது உடல்நலம் தேறியுள்ள யுவராஜ் சிங், அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நேற்று யுவராஜ் சிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது அவர், இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது எனது உடல் கொஞ்சம் கொஞ்சமாக பலமடைந்து வருகிறது. இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் விளையாட தீர்மானித்துள்ளேன்.

இந்திய அணியில் மீண்டும் இணைந்து விரைவில் விளையாட வேண்டும் என்பதை எனது இலக்காக உள்ளது. இதற்காக கடுமையாக முயன்று வருகிறேன்.

டி20 உலகக் கிண்ண தொடரில் உறுதியாக விளையாட முடியும் என்று கூற முடியாது. ஏனெனில் அதற்காக வரும் ஒன்றரை மாதத்திற்கு எனது உடலை பக்குவப்படுத்த வேண்டும்.

உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க விருப்பமாக உள்ளேன். ஆனால் போட்டிகளான அட்டவணை தெளிவாக தெரியவில்லை. எனவே ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளேன். இதற்காக தற்போது இருந்தே துடுப்பாட்ட பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

நான் விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் அவசரப்பட்டு நான் இந்திய அணிக்கு திரும்ப விரும்பவில்லை. 100 சதவிகிதம் உடல் திறன் பெற காலத்தை எடுத்து கொள்வேன்

ஆனால் டி20 உலகக் கிண்ண தொடருக்கு முன்பு எனது முழுதிறனை மீட்டு கொள்வேன் என்றார்.

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற பயிற்சியின் போது யுவராஜ் சிங்குடன், இந்திய வீரர்களான வீரேந்திர ஷேவாக், இர்பான் பதான், வருண் ஆரோன், ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐபிஎல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது
இந்தியாவுடன் மோதுனாலே ஸ்பெஷல் தான்: முகமது ஹபீஸ்
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? பரபரப்பான தகவல்கள்
சூதாட்டம் தொடர்பாக சண்டிலாவுக்கு குரல் சோதனை
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
ஐஸ் ஹொக்கி போட்டி: 60 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளி வென்ற சுவிஸ்!
இறுதிச் சுற்றுக்குள் நுழைவது யார்? சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
பிராட் பந்துவீச்சில் 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விவகாரம்: உள்ளூர் வீரர்கள் ஏஜெண்டாக செயல்பட்டது அம்பலம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:42.30 மு.ப ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று ஓய்வு நாள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:57.18 மு.ப ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 3ம் திகதி தொடங்கியது. [மேலும்]
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:28.21 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:37.49 மு.ப ] []
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரர்களின் துணையோடு 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்ட தரகர்கள் கோடி கோடியாக பணம் அள்ளுகிறார்கள். [மேலும்]
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:17.25 மு.ப ]
ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நேற்று 100வது விக்கெட்டை கைப்பற்றினார். [மேலும்]