| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| ஜேர்மன் கிராண்ட்பிரிக்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் அலோன்சா |
| [ திங்கட்கிழமை, 23 யூலை 2012, 02:27.08 பி.ப GMT ] |
ஜேர்மன் கிராண்ட்பிரிக்ஸ் பார்முலா 1 கார் பந்தயத்தில் உலகின் முன்னணி வீரரான பெராரி அணியின் பெர்னாண்டோ அலோன்சா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.இந்த வருடத்திற்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகளாக நடத்தப்பட்டு வருகிறது. 9 கிராண்ட்பிரிக்ஸ் கார்பந்தயம் முடிந்த தருவாயில் 10வது கிராண்ட்பிரிக்ஸ் நேற்று நடைபெற்றது.
ஜேர்மன் கிராண்ட்பிரிக்ஸ் வெற்றியின் மூலம் இந்த வருட பார்முலா 1 பந்தயத்தில் அலோன்சா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். மற்றொரு முன்னணி வீரரான மெக்லர்னஸ் அணியின் ஜென்சன் பட்டன் 2வது இடம் பிடித்தார்.
பின்லாந்தின் கிமி ரேய்க்கோனன் 3வது இடத்தையும், ஜப்பானின் காமூய் கோபயாஷி 4வது இடத்தையும் பிடித்தனர்.
உள்ளூர் வீரரும் நடப்பு சாம்பியனுமான ரெட்புல் ரேசிங் அணியின் செபாஸ்டியன் வெட்டல் இப்போட்டியில் 5வது இடத்தை பிடித்தார். 30 அயது ஸ்பெயின் வீரரான அலோன்சா இந்த ஆண்டில் பெற்றுள்ள 3வது கிராண்ட்பிரிக்ஸ் வெற்றி இதுவாகும்.
முன்னதாக ஐரோப்பிய மற்றும் மலேசிய கிராண்ட்பிரிக்ஸ் பந்தயங்களில் அலோன்சா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஜேர்மனி வீரரான மைக்கேல் ஷுமாக்கரால் ஜெர்மன் கிராண்ட்பிரிக்சில் 7வது இடத்தையே பிடிக்க முடிந்தது.


|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:21.02 மு.ப ] |
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ] |
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] | | 4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ] |
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்] | | ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ] |
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்] | | ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ] |
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|