| | | |
| |
| | | |
| |
| ஒலிம்பிக்ஸ் செய்தி |
| ஒலிம்பிக்கில் இளையராஜாவை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் |
| [ வெள்ளிக்கிழமை, 29 யூன் 2012, 07:43.40 மு.ப GMT ] |
இந்தியாவின் இசைஞானி இளையராஜாவின் பாடலைத் தொடர்ந்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறவுள்ளது.ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் இந்தியத் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களின் இசை ஒரே நேரத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களும், குறிப்பாக தமிழ் ரசிகர்கள் பெரும் குஷியடைந்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜா முன்பு இசையமைத்த ராம் லட்சுமண் திரைப்படத்தில் இடம் பெற்ற நான்தான் ஙொப்பண்டா என்ற பாடல் இடம் பெறுகிறது.
இந்த நிலையில், தற்போது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறவுள்ளது. திரைப்பட இயக்குநர் டேணி பாயில் தலைமையிலான விழாக் குழுவினர்தான் தொடக்க விழா நிகழ்ச்சிகளை இறுதி செய்து வருகின்றனர்.
இதே பாயில் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளையும் அவர் வென்றார்.
இந்த நிலையில் பாயிலுடன் மீண்டும் இணைந்துள்ளார் ரஹ்மான். ஒலிம்பிக் தொடக்க விழாவில் எந்த மாதிரியான பங்களிப்பை ரஹ்மான் தரவிருக்கின்றார் என்பது தெரியவில்லை.
இருப்பினும் ஏற்கனவே உருவாக்கிய பாடலாக இல்லாமல், பிரத்யேகப் பாடலாக ரஹ்மான் உருவாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:21.02 மு.ப ] |
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ] |
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] | | 4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ] |
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்] | | ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ] |
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்] | | ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ] |
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|