மென்பந்தாட்ட செய்தி
287 வாரங்கள் முதலிடத்தில் நீடித்து புதிய உலக சாதனை படைத்தார் பெடரர்
[ செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 05:30.44 மு.ப GMT ]
சமீபத்தில் விம்பிள்டன் கிண்ணத்தை 7வது முறையாக வென்று சாதனை படைத்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தற்போது புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

உலக டென்னிஸ் தரவரிசையில் முன்னாள் அமெரிக்க வீரரான பீட் சாம்ப்ராஸ் 286 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது.

சாம்ப்ராசின் இச்சாதனையை 287 வாரங்கள் முதலிடத்தில் நீடித்து 30 வயதான பெடரர் நேற்று முறியடித்தார்.

கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 22வது வயதிலேயே உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த பெடரர் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் வரை தொடர்ந்து முதலிடத்திலேயே நீடித்து வந்தார்.

2009ம் ஆண்டு யூலை மாதத்தில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய அவர், 2010 பிரெஞ்ச் ஓபனில் அடைந்த தோல்வியால், ரபேல் நடால் முதலிடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில், 17 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், சமீபத்தில் விம்பிள்டன் கிண்ணத்தை 7வது முறையாக வென்றதன் மூலம் 2 வருட இடைவெளிக்குப் பின்பு மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். அடுத்து வர இருக்கும் ஒலிம்பிக் தொடர் வரை பெடரர் முதலிடத்திலேயே நீடிப்பார்.

மேலும், ஆண்ட்ரே அகாசிக்கு பின்னர் முதலிடத்தைப் பிடித்த வயதான வீரர் பெடரர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
ஐதராபாத் ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது கொல்கத்தா
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
மீண்டும் வீழ்ந்தது டெல்லி: 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்
ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை தரகர்களுக்கு 50 கோடி ரூபாய் வருவாய்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: செரினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு கம்பீரிடம் கேட்பேன்: கோஹ்லி
கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:48.36 மு.ப ] []
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். [மேலும்]
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:06.49 மு.ப ] []
டெஸ்ட் போட்டியில் சாதிக்க கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் தந்த ஆலோசனைகள் முக்கிய காரணம் என்று பெங்களூர் அணியின் இளம் இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். [மேலும்]
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
[ சனிக்கிழமை, 18 மே 2013, 05:40.11 மு.ப ] []
சூதாட்ட பிரச்னையில் கைதான அமித் சிங் கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறிய அதிர்ச்சி தகவல் தற்போது தெரிந்துள்ளது. [மேலும்]
ராஜஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது: ஐதராபாத் அபார வெற்றி(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 05:59.17 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஸ்பாட்பிக்சிங் செய்தது உண்மைதான்: அன்கித் சவான் ஒப்புதல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:10.04 பி.ப ] []
சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான் இது மிகப்பெரிய தவறு என்று ராஜஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் அன்கித் சவான் ஒப்புக் கொண்டுள்ளார். [மேலும்]