துடுப்பாட்ட செய்தி
இலங்கையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 29 யூன் 2012, 12:10.33 பி.ப GMT ]
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய அணிகள் பங்கேற்கும் 19 வயதிற்குட்பட்ட வீரர்களான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான் வரும் 1ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றது. இந்த நிலையில் இன்று 2வது அரையறுதிப் போட்டி கின்ராரா ஓவல் அகடமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்கத்தில் ஓட்டக் குவிப்பில் மந்தமாக இருந்த இலங்கை அணி, 33.1 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை எடுத்திருந்தது. அதன்பிறகு இலங்கை அணியின் ஓட்டக் குவிப்பு சூடுப்பிடித்தது.

5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த நிரோஷன், வீரக்கொடி ஜோடி 113 ஓட்டங்களை குவித்தது. சன்டன் வீரகொடி 75 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 73 ஓட்டங்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய நிரோஷன் டிக்வில்லா 8 பவுண்டரிகளை அடித்து அரைசதம் கடந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து 244 ஓட்டங்களை குவித்தது. இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாபா அபரஞ்சித் 10 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

245 ஓட்டங்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே பொறுப்பாக ஆடியது. இந்திய அணித்தலைவர் உன்முக்த் சந்த் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். 1 சிக்ஸ், 11 பவுண்டரிகள் விளாசிய உன்முக்த் சந்த் சதமடித்தார்.

அவருக்கு இடதுகை துடுப்பாட்ட வீரர் விஜய் சோல் ஒத்துழைப்பு கொடுத்து ஆடி அரைசதம் கடந்தார். இந்திய அணி வெற்றிப் பெற 6 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், உன்முக்த் சந்த் ஆட்டமிழந்தார்.

முடிவில் இந்திய அணி 47.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களை எடுத்து வெற்றிப் பெற்றது. இதன் மூலம் வரும் 1ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதிப் பெற்றது.

முன்னதாக லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் 1 ஓட்டத்தில் தோல்வியை தழுவிய இந்தியா, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்த முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் எலிமினேட்டர்: துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத் (நேரடி ஒளிபரப்பு)
பிரெஞ்ச் ஓபனிலிருந்து முர்ரே விலகல்
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த்
சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்
ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம்
சாதிக்க வேண்டிய கட்டயாத்தில் ராஜஸ்தான்? பிளேஆப் சுற்றில் ஐதராபாத்துடன் இன்று மோதல்
பெல்ஜியம் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா
ஹஸ்சி, ரெய்னாவின் அதிரடியால் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சென்னை: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை (வீடியோ இணைப்பு)
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:21.02 மு.ப ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ]
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ]
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்]
ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ]
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்]
ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ]
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்]