துடுப்பாட்ட செய்தி
இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
[ திங்கட்கிழமை, 17 செப்ரெம்பர் 2012, 12:27.11 பி.ப GMT ]
இந்தியா கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கையில் நாளை தொடங்க உள்ள டி20 உலகக் கிண்ண தொடருக்கு முந்தைய பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய கவுதம் கம்பீர் 10 ஓட்டங்களும், வீரேந்திர ஷேவாக் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய வீராட் கோஹ்லியும், ரோகித் சர்மாவும் நிலைத்து நின்று ஆடினர்.

ரோகித் 56 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். கோஹ்லி ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 75 ஓட்டங்கள் எடுத்தார்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து 186 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க வீரராக களமிறங்கிய அணித்தலைவர் மொகமது ஹபிஸ் 38 ஓட்டங்களும், இம்ரான் நசிர் 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்பு களமிறங்கி அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் கடந்து 92 ஓட்டங்களும், சொய்ப் மாலிக் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களும் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

பந்துவீச்சில் இந்திய சார்பாக அஸ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? பரபரப்பான தகவல்கள்
சூதாட்டம் தொடர்பாக சண்டிலாவுக்கு குரல் சோதனை..!
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
ஐஸ் ஹொக்கி போட்டி: 60 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளி வென்ற சுவிஸ்!
இறுதிச் சுற்றுக்குள் நுழைவது யார்? சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
பிராட் பந்துவீச்சில் 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி
ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர்
ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று ஓய்வு நாள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:57.18 மு.ப ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 3ம் திகதி தொடங்கியது. [மேலும்]
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:28.21 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:37.49 மு.ப ] []
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரர்களின் துணையோடு 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்ட தரகர்கள் கோடி கோடியாக பணம் அள்ளுகிறார்கள். [மேலும்]
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:17.25 மு.ப ]
ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நேற்று 100வது விக்கெட்டை கைப்பற்றினார். [மேலும்]
மீண்டும் வீழ்ந்தது டெல்லி: 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:13.28 மு.ப ] []
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் புனே வாரியர்ஸ் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்]