| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| டோனி எப்போதும் நெருக்கடியில் விளையாடுகிறார்: மோர்கன் |
| [ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 12:08.48 பி.ப GMT ] |
இந்திய அணியின் அணித்தலைவர் டோனிக்கு பொறுப்புகள் அதிகம் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் மோர்கன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், அவருக்கு எப்போதும் நெருக்கடி ஏற்படுகிறது. அவர் இந்தியாவுக்கே அணித்தலைவராக விளங்குகிறார்.
120 கோடி மக்கள் அவரது தோளில் உள்ளனர். மிகப்பெரிய நாட்டின் அணித்தலைவர் எனவே அவர் ஒவ்வொரு போட்டியிலும் நெருக்கடிக்கு ஆளாகிறார்.
கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அதிலும் சொந்த மண்ணில் ஆடும்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அவர் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு நல்ல மவுசு இருக்கிறது. எனவே நாங்கள் இங்கு விளையாடுவது சொந்த மண்ணில் விளையாடுவதைவிட வித்தியாசமாக உள்ளது.
இங்கு எங்களைச் சுற்றிலும் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் விளையாட வரும் போது விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் வரை இந்திய ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பை பார்த்து பிரமித்துபோகிறோம்.
இந்திய அணியுடன் மோதும் போது நாங்களும் நெருக்கடியுடன் விளையாட வேண்டி உள்ளது என்றும் அந்த அளவுக்கு இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் எனவும் கூறியுள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:37.02 மு.ப ] [ ] |
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட ஏராளமான பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்தனர். [மேலும்] | | ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு கம்பீரிடம் கேட்பேன்: கோஹ்லி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:08.44 மு.ப ] |
பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்] | | கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு) |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:36.29 பி.ப ] [ ] |
ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்] | | ஸ்ரீசாந்துக்கு ஆதரவு கொடுத்த டிராவிட் |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:07.42 பி.ப ] [ ] |
சூதாட்ட புகாரில் கைதான ஸ்ரீசாந்துக்கு ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் டிராவிட் எப்போதும் ஆதரவாக இருந்து வந்துள்ளார் என்று மேற்கு வங்க வீரர் ரானாதேவ் போஸ் கூறியுள்ளார். [மேலும்] | | படுக்கையறை காட்சிகளால் மிரட்டப்பட்டாரா ஸ்ரீசாந்த்? |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 11:42.53 மு.ப ] |
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|