மென்பந்தாட்ட செய்தி
அவுஸ்திரேலிய ஓபன்: சானியா ஜோடி அசத்தல் வெற்றி
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:43.25 மு.ப GMT ]
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறி உள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர்-2 வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை சந்தித்தார்.

இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஷரபோவா 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்ற போட்டிகளில் சீனாவின் லீ நா, போலாந்தின் ரத்வன்ஸ்கா, ஜேர்மனியின் கெர்பர், செர்பியாவின் இவானோவிச், ஜேர்மனியின் ஜூலியா, ரஷ்யாவின் எகடரினா மகரோவா உள்ளிட்டோர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் நம்பர்-1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் ஸ்டேபானக்கை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் ஸ்பெயினின் டேவிட் பெரர், செக் குடியரசின் தாமஸ் பெர்டிக், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், செர்பியாவின் ஜான்கோ டிப்சர்விச், ஜப்பானின் கெய் நிஷிகோரி ஆகியோர் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி, அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், லூக் ஜோடியை சந்தித்தது.

இதில் அசத்திய சானியா ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஹஸ்சி, ரய்னாவின் அதிரடியால் சென்னை அபார வெற்றி: 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மும்பை(வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல். போட்டியிலிருந்து புனே அணி திடீர் விலகல்..!
ஐபிஎல் சூதாட்டம்: பிரபல நடிகர் தாரா சிங்கின் மகன் கைது
இந்தியாவுடன் மோதுனாலே ஸ்பெஷல் தான்: முகமது ஹபீஸ்
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? பரபரப்பான தகவல்கள்
சூதாட்டம் தொடர்பாக சண்டிலாவுக்கு குரல் சோதனை
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
ஐஸ் ஹொக்கி போட்டி: 60 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளி வென்ற சுவிஸ்!
இறுதிச் சுற்றுக்குள் நுழைவது யார்? சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விவகாரம்: உள்ளூர் வீரர்கள் ஏஜெண்டாக செயல்பட்டது அம்பலம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:42.30 மு.ப ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. [மேலும்]
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று ஓய்வு நாள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:57.18 மு.ப ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 3ம் திகதி தொடங்கியது. [மேலும்]
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:28.21 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:37.49 மு.ப ] []
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரர்களின் துணையோடு 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்ட தரகர்கள் கோடி கோடியாக பணம் அள்ளுகிறார்கள். [மேலும்]
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:17.25 மு.ப ]
ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நேற்று 100வது விக்கெட்டை கைப்பற்றினார். [மேலும்]