| | | |
| |
| | | |
| |
| ஒலிம்பிக்ஸ் செய்தி |
| ஒலிம்பிக் போட்டி: இந்தியா விண்ணப்பிக்காது |
| [ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2009, 12:31.49 பி.ப GMT ] |
| இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக விண்ணப்பிக்க மாட்டோம் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கூறினார். நடிகையும், எம்.பி.யுமான ஜெயா பச்சன் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் புதன்கிழமை அமைச்சர் கில் கூறியதாவது: தில்லியில் அடுத்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுவதால், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டமில்லை. போட்டிகளை நடத்துவதற்கும் இந்தியா விண்ணப்பிக்காது.
நாட்டில் உள்ள வறுமையைப் பாருங்கள். நாள்தோறும் வறுமை அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைப் பாருங்கள்.
இந்தியாவில் ஒலிம்பிக்கை நடத்தவேண்டும் என்று சாதாரண மக்கள் விரும்பவில்லை. குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே ஒலிம்பிக் நல்ல பொழுதுபோக்காக அமையும்.ஒலிம்பிக் போட்டியை நடத்த ஏராளமான கோடி ரூபாய்களை சீனா செலவழிக்கிறது. அதுபோன்று செலவழிக்கத் தயாராக இருந்தால் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது பற்றி யோசிக்கலாம்.
காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதை சிறப்பாக நடத்தி முடிப்போம் என்றார் அவர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|