| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| கோஹ்லியுடன் ஊர் சுற்றிய யுவராஜ் சிங் |
| [ சனிக்கிழமை, 30 யூன் 2012, 11:28.18 மு.ப GMT ] |
புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள இந்திய சகலதுறை வீரர் யுவராஜ் சிங், தற்போது கொஞ்ச கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார். இதை அவரது சமீபகால நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன.கடந்த ஐ.பி.எல் 5 தொடரின் போது, புனே வாரியர்ஸ் அணி பங்கேற்ற சில போட்டிகளின் போது, புனே ஆடுகளத்திற்கு வந்த யுவராஜ் சிங் சிறிதுநேரம் பயிற்சியில் ஈடுபட்டார்.
தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் தொடங்க உள்ள நிலையில், இந்திய சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் யுவராஜ் சிங், நேற்று இந்தி சினிமாவிற்கு சென்றதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து யுவராஜ் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, தற்போது தான் கேங்ஸ் ஆப் வேஸிபர் என்ற இந்தி சினிமாவை பார்த்துவிட்டு வந்தோம். என்னுடன் வந்த வீராட் கோஹ்லியும், பிரவீண் குமாரும் சினிமா காட்சிகளை ரசித்து பார்த்தனர்.
சினிமாவில் வரும் நடிகர் மனோஜ் பஜ்பாய் சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் அவருக்கு சினிமாவில் மீண்டும் ஒரு சிறப்பான இடத்தை பெற்று தர உதவும். அதேபோல நானும் இந்திய அணிக்கு மீண்டும் விரைவில் திரும்புவேன் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரில் பயிற்சியின் இடையே பேசிய யுவராஜ் சிங், தற்போது உடல்நிலை தேறி வரும் நான், இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண போட்டியில் கலந்து கொள்ள இலக்கு நிர்ணயித்து உள்ளேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஐ.பி.எல் சூதாட்டத்தால் தம்பியைக் கடத்திக் கொன்ற பட்டதாரி வாலிபர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:52.52 மு.ப ] [ ] |
மும்பையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பதற்காக 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டான். [மேலும்] | | டோனியிடம் மன்னிப்பு கோரிய ஸ்ரீசாந்தின் தந்தை |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:12.50 மு.ப ] [ ] |
அணித்தலைவர் டோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசியதற்காக ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்] | | சூதாட்டம் நடந்ததற்காக ஐ.பி.எல் போட்டியை நிறுத்த முடியாது: பி.சி.சி.ஐ |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 06:04.28 மு.ப ] |
நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்] | | டெல்லியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி(வீடியோ இணைப்பு) |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 06:25.51 பி.ப ] [ ] |
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 67வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்] | | ஐ.பி.எல் சூதாட்டம் நடந்தது எப்படி? வீடியோ மூலம் விளக்கிய பொலிஸ் கமிஷனர் (வீடியோ இணைப்பு) |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:19.17 பி.ப ] [ ] |
டிகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான அதிக வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இந்த சூதாட்டத்தின் முக்கிய புள்ளி வெளிநாட்டில் இருந்துக் கொண்டு செயல்பட்டதாகவும் டெல்லி பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|